ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளதாக தெரிகிறது. இந்த பங்களா அனைத்து விதிமுறைகளையும் மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் இந்த அரண்மனை கடந்த ஏழு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த கட்டிடம் சுற்றுலாத் துறைக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டாலும் ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த பயன்பாட்டுக்காக தான் கட்டப்பட்டது என்று கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேர்தலுக்குப் பிறகு இந்த கட்டிடத்தின் கிரகப்பிரவேசத்தை நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் ஆந்திர அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.