வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் விவசாயி கதிர்வேலை (வயது 38) இரும்புக்கம்பியால் தலை மற்றும் உடலில் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து முத்தம்பட்டி பஸ் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த தெற்குகாடு பகுதியைச்சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பாலமணிகண்டன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
போலீசார் டிரைவர் பாலமணிகண்டனை மேற்கொண்ட விசாரணையில், அவரது மனைவி கிணற்றில் தண்ணீர் எடுக்கச்செல்லும் போது, அதே பகுதியில் சேர்ந்த கதிர்வேல் என்பவர் தவறான முறையில் பேசியதுடன், செல்போனிலும் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் கதிர்வேல் வீட்டிற்கு சென்று பாலமணிகண்டன் தட்டி கேட்ட போது, நான் அப்படித்தான் பேசுவேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த நான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் தலையிலும், முகத்திலும் பலமாக அடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலமணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.