சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சிரியா சம்பவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் பெரும்பாலும் கொல்லப்பட்டு பச்சிளம் குழந்தைகள்தான். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து கவிஞ்ர் வைரமுத்து சிரியா மண்ணே சிரி என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குரல் வடிவிலும் யூ-டியூபில் பதிவிட்டுள்ளார்.
சிரியா மண்ணே சிரி - கவிதை
குருதித் துளி சொட்டுகிறது, மழை அறியா சிரியா வானம்..
இப்போது இது என்தேசம் சென்கிறது;
மேகங்களை நாடுகடத்தி ஆகயங்கள் கை பற்றிய கரும்புகை..