ஒயிட் ஹெல்மெட்ஸ்: யார் இவர்கள்? சிரிய போரில் இவர்களது பங்கு என்ன??

புதன், 28 பிப்ரவரி 2018 (19:33 IST)
சிரியா அரசிற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான் போர் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. சிரியாவில் 2014 முதல் இந்த போர் நடந்து வருகிறது. இதில் மக்கள் பலர் உயிரிழந்து வருகின்ரனர்.  
 
இந்நிலையில், சிரியாவில் வான்வழி தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் ஒயிட் ஹெல்மெட் நபர்கள் அதிக அளவில் காணப்படுகின்றனர். யார் இவர்கள் என்பதை காண்போம்...
 
சிரிய உள்நாட்டு போர் துவங்கிய 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு. ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000 தன்னார்வலர்கள் உள்ளனர். 
 
ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பில் பெரும்பாலனவர்கள் பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள். இவர்கள் போரில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி மருத்துவம்னையில் சேர்த்து முதலுதவியும் செய்கின்றனர். 
 
இந்த ஒயிட் ஹெல்மெட் உதவியாளர்கலையும் விட்டு வைப்பதில்லை சிரிய அரசு படைகள். மேலும் சிரியாவில் நடக்கும்  அட்டூழியங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்