சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தற்போது படமாக எடுக்க இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
பொதுவாக ஏதாவது முக்கியமான பிரச்சணைகளை படமாக எடுப்பது சினிமாக்காரர்களின் வழக்கம். ஏற்கனவே டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார விவகாரத்தை படமாக எடுக்கப்போவதாக பேசப்பட்டது, சில நடிகைகள் தாங்களாகவே அதில் நடிக்க முன்வருவதக அறிவித்தனர்.
அதேப்போல் சுவாதி விவகாரத்தையும் படமாக எடுக்கப்போவதாக பேசப்படுகிறது. இந்த படத்தில் ராம்குமார் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாகவும், எஸ்.ஜே.சூர்யா இதற்கு சம்மதம் தெரிவித்து திரைக்கதை அமைக்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தில் சுவாதி கதாப்பாத்திரத்தில் நடிக்க, காஜல் அகர்வால், தமனா ஆகியோரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் இன்னமும் முடிவாகவில்லை எனவும், ஒருவேளை எஸ்.ஜே.சூர்யாவே இந்த படத்தை இயக்கி நடிக்கலாம் என பேசப்படுகிறது.