சுவாதி ஒரு ‘நான் ஸ்டாப்’ : நானும், அவளும் சண்டையிட்டிருக்கிறோம்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (08:14 IST)
சுவாதி படுகொலை வழக்கு சம்மந்தம்மில்லாத பலரையும் சோகத்துக்கு ஆளாக்கியது, இன்னமும் பலர் அந்த படுகொலை குறித்து பேசிக்கொண்டும், சுவாதிக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தமிழகத்தையே சோகமாக்கியது.


 
 
எங்கோ இருக்கும் நமக்கே சுவாதி படுகொலை இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் போது சுவாதியுடன் பழகியவர்களுக்கு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
 
சுவாதியுடன் பணிபுரியும், அவருடன் ரயிலில் பயணிக்கும் தோழி ஒருவர் சுவாதி குறித்து மனம் திறந்துள்ளார்.
 
மின்சார ரயிலில் காலை 6.15 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் ஏறும் சுவாதி எனக்காக அவர் ஹேண்ட் பேக்கை வைத்து இடம் பிடித்து வைத்திருப்பார். இருவரும் பேசிக்கொண்டே வருவோம், ரயிலில் தான் இருவரும் காலை உணவை உண்போம்.
 
சுவாதி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை என கூறி கண்கலங்கினார் அந்த தோழி. சுவாதி படுகொலை நடந்த வாரம் எனக்கு நைட் ஷிப்ட். இதனால் அவளுடன் நான் செல்லவில்லை. எங்கள் நட்பு வட்டாரத்தில் எல்லோருக்கும் ஒரு செல்லப்பெயர் இருக்கிறது. சுவாதியை 'நான் ஸ்டாப்' என செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவோம்.
 
சுவாதி பேச ஆரம்பித்தார் இடையில் யாரையும் பேச விடமாட்டார். அதனால் தான் அந்த பெயர் வைத்தோம். எல்லோருக்கும் சுவாதியை பிடிக்கும். அவளை யாராலும் மறக்க முடியாது.
 
சுவாதியும் நானும் சில நேரங்களில் சண்டையிட்டிருக்கிறோம் ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த நிமிடமே சுவாதி பேசிவிடுவார். சுவாதி இரக்க குணம் உடையவர். தன்னை ஒரு கட்டடத் தொழிலாளி பின்தொடர்ந்து வருவதாக ஒரு முறை சொல்லி இருக்கிறாள்.
 
ஆனால் இது கொலை செய்யும் அளவுக்கு போகும் என யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. இப்போது என் அருகில் அமர்ந்த சுவாதி இல்லாமல், செங்கல்பட்டு மின்சார ரயிலில் அலுவலகத்துக்குச் செல்கிறேன். அவள் இல்லாத பயணத்தைத் தவிர்க்க, இருப்பிடத்தை செங்கல்பட்டுக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார் சுவாதியின் பிரிவால் சோகத்தில் இருக்கும் அவரது தோழி ஒருவர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்