முதல்ல நல்லா நடவடிக்கை எடுத்தார்.. இப்போ கண்டுக்கல! – பிரதமர் மீது மக்கள் அதிருப்தி; ஆய்வில் தகவல்!

Webdunia
புதன், 19 மே 2021 (10:43 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கையில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோனா முதல் அலை பரவ தொடங்கிய போது இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக நீடித்த ஊரடங்கு பின்னர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது. முதல் அலையின் போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் பலருக்கு பாதிப்பு என்றாலும் கொரோனாவை கட்டுப்படுத்துதலில் முன்னேற்றம் கண்டதாக இந்தியாவை உலக நாடுகளே பாராட்டின.

இந்நிலையில் தற்போது இரண்டாம் அலையில் மத்திய அரசு முழு ஊரடங்கு அறிவிக்காததும், முதல் அலையின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அளவிற்கு இரண்டாம் அலையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் மக்கள் கருதுவதாக தெரிகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் முதல் அலையின்போது அரசு சிறப்பாக செயல்பட்டதாக 89% பேர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த வீதம் 59% ஆக சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்