ஹரியானாவை அச்சுறுத்தும் கறுப்பு பூஞ்சை பாதிப்பு! – சிறப்பு படுக்கை அமைக்க நடவடிக்கை!

புதன், 19 மே 2021 (10:15 IST)
ஹரியானாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து மீள்பவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதற்கான மருந்துகள் பற்றாக்குறை நிலவும் நிலையில் முன்கூட்டியே மருந்து இருப்பை அதிகரிக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் 115 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஹரியானா மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு படுக்கைகள் ஏற்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்