சுர்ஜித் மரணம் : யார் மீது தவறு ? முடிந்தால் இதைச் செய்யலாமே !

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (19:17 IST)
திருச்சி அருகே நடுக்க்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுர்ஜித் ( 2 வயது). கடந்த 25 ஆம் தேதி, வீட்டில் அருகே இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். இதற்கு தமிழக அரசு அத்துணை பெரிய தீவிர முயற்சிகள் எடுத்தும் முயற்சி பலனளிக்காமல் இன்று அதிகாலை 2:  30 மணி அளவில் சுஜித் உயிரிழந்தான். இதற்கு நாட்டின் அனைத்துத் தரப்பினரும் சுர்ஜித் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இனிமேல் இதுபோல் யாரும் பாதிக்கப்பட கூடாது என தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
சுஜித்தின் மரணத்திற்கு பெற்றோரையும்,  தமிழக அரசையும் நாம் எளிதில் குற்றம் சொல்லி விட முடியாது.
 
தமது குழந்தை அங்கு செல்ல மாட்டான் என பெற்றொர் நினைத்திருக்க வாய்ப்ப்புண்டு! அந்த ஆழ்குழாயை அவர்கள் ஒரு சல்லடையால் மூடி வைத்திருந்தால் தமிழ்நாடு தங்கள் தங்க மகன் சுஜித்தை இழந்திருக்காது என்பதுதான் மக்களின் மனக்குறை.
 
அதேபோல் அரசு தன்னாலான எல்லா முயற்சிகளையும் கண்ணும் கருத்துமாக மேற்கொண்டது. என்றாலும் நாம் தொழில்நுட்பத்தில் அசகாய சூரர்கள் என்று பெருமை பேசுவதை விட்டு, பழமையை பேசி தோளுயர்த்துவதை விட்டுவிட்டு, சமூக வலைதளங்களில் இளைஞர்கள் நடிகர்களின் துதிபாடுவதையும், வெறுப்பைத் தூண்டிப்பேசி  நேரத்தை வீணடிப்பதையும் விட்டுவிட்டு இஸ்ரேலைப்போல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, நம்மிடம் இல்லாததை தொழில்நுட்பத்தை உருவாக்க முயன்றால் இனியொரு சம்பவம் இதுபோல் நடக்காது.

நாம் வல்லரசு ஆக இன்னும் எத்தனை தூரம் உள்ளது என்பதை அருமைக் குழந்தை சுர்ஜித் விஷயத்திலாவது நாம் விழித்தெழுந்து உணர  வேண்டும்.
 
ஆரம்பத்தில் சுர்ஜித் இருந்த 25 அடி ஆழத்திலிருந்து அவனை மீட்டிருக்க  முடியும் என பலரும் கூறுகிறார்கள். 
 
சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், அரபு தேசத்தில் ஒரு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான், உடனே சிறுவனை மீட்க தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புத்துறையினர்  அங்கு குழுமி ஒருசிறுவனில் உடலில் நான்கு ஐந்து கயிற்றை கட்டி, அவனை அழ்துளைக்கிணற்றில் இறக்கி, ஏற்கனவே சிக்கியுள்ள சிறுவனை குறைந்த கால  அவகாசத்தில் மீட்டனர்.  
 
அதைப் பார்க்கும்போது, நம் சுஜீத்தையும் மீட்க முடிந்திருக்கும் என்றே தோன்றியது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்ததால் சுர்ஜித் உயிரிழந்துவிட்டான். இனிமேல் இதுபோல் நடக்காது என மக்கள் உறுதி கூறினாலும் அதைச் செயல்படுத்த வேண்டியது மக்களும் அரசு அதிகாரிகளும்தான்.
 
அதேபோல் இந்த ஆழ்துளை கிணறு அமைக்க மக்கள் அனுமதி கேட்கும்போதே அதை வந்து அரசு அதிகாரிகள் பார்த்து நீர் இல்லாத கிணறுகளை மூட உரிய முறையில் உத்தரவிட வேண்டும். 
முடிந்தால் ரஜினி, விஷால் சொன்னது போல் ஆழ்துளை கிணறுகளை மூடாதவர்களுக்கு அதிக அபாரதம் விதிக்க வேண்டும்.
 
அப்போது தான் நம் குழந்தை சுஜித்தை போல் இனி யாரும் பலியாக மாட்டார்கள் என பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்