பொருளாதாரம், உயர் தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசார பரிமாற்றம் ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளன. தூய எரிசக்தி, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கவும் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
மனிதவள பரிமாற்றத்தை மேம்படுத்தும் விதமாக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விசா வழங்கப்படும். மேலும், இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் திறமையான பணியாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் ஜப்பானிய தொழில்துறைகளில் பணியாற்றவும், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களை பெறவும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று தகாஹாஷி முனியோ தெரிவித்தார்.