சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க முடியவில்லை.. மாணவர்கள் குழப்பம்..!

Mahendran

செவ்வாய், 13 மே 2025 (14:51 IST)
சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், சற்றுமுன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வு முடிவுகளை பார்க்கும் இணையதளங்களில் லிங்குகள் இணைக்கப்படாமல் இருப்பது மாணவர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
 
நாடு முழுவதும் சிபிஎஸ்சி 10,12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்டன. இன்று வெளியான 12ஆம் வகுப்பு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, result.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களின் மூலம் பார்த்து தெரிந்து கொண்டனர்.
 
இதையடுத்து, அதே இணையதளங்களில் பத்தாம் வகுப்பு முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தேர்வு முடிவுகளை காண்பதற்கான லிங்குகள் எந்த இணையதளத்திலும் இதுவரை இணைக்கப்படவில்லை.
 
CBSE அறிவித்துள்ள மூன்று முக்கிய இணையதளங்களிளான cbseresults.nic.in, results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகியவற்றிலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
 
இந்த நிலையில், சிபிஎஸ்சி தரப்பிலிருந்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்