9 கோடி பேர் யூ ட்யூப்பில் பார்த்த சன்னி லியோனின் பாடல் தமிழில் வருகிறது!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (19:26 IST)
கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் 'ராகினி எம்எம்எஸ் 2' என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.


 
 
இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் 'ராத்ரி' என்று பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட இருக்கின்றனர்.
 
இந்த படத்தில் சன்னி லியோன் நடனமாடிய 'பேபி டால்' என்ற சூப்பர் ஹிட் பாடலை இதுவரை சுமார் 9 கோடி பேர் யூ ட்யூப்பில் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
தமிழில் இந்த பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். 
 
’ராத்ரி’ படத்தின் வசனங்களையும், பாடல்களையும் ஆதிராஜன் என்பவர் எழுதியிருக்கிறார். இவர், சிவந்தி, ரணதந்த்ரா, அதர்வணம் போன்ற படங்களின் இயக்குநராவார்.
அடுத்த கட்டுரையில்