திடீரென குறைக்கப்பட்ட கோடை விடுமுறை! – அதிர்ச்சியில் ஆசிரியர்கள்!

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (12:00 IST)
அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை நாள் குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடக்காமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வு நடத்தப்பட்டது. 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்னதாக தேர்வு தொடங்கி மே 13ம் தேதி முடிவடைந்தது.

அதையடுத்து மே 14 முதல் ஜூன் 12 வரை 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலயில் தற்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை 5ம் தேதியுடன் முடிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6ம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் இந்த ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்