"மொபைல் டேட்டா நுகர்வில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஜிபி டேட்டாவின் விலை, ஒரு கப் தேநீரின் விலையை விடவும் குறைவாக உள்ளது," என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டுக்குப் பின், இந்தியாவில் மின்னணு உற்பத்தி 6 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் தயாரிப்பு 28 மடங்கும், ஏற்றுமதி 127 மடங்கும் உயர்ந்துள்ளன. இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக மாறியுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், "கடந்த 11 ஆண்டுகளில் மொபைல் டேட்டா விலை 98% குறைந்துள்ளது. 2014-ல் ரூ. 287-ஆக இருந்த ஒரு ஜிபி டேட்டாவின் விலை, இன்று ரூ. 9.11 ஆகக் குறைந்துள்ளது," என்றார். உலகளவில் மொத்த மொபைல் பயனர்களில் 20% பேர் இந்தியர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.