சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கனமழை.. இன்றிரவு ஜாக்கிரதை மக்களே..!

Mahendran

புதன், 8 அக்டோபர் 2025 (17:24 IST)
தென் இந்திய பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட 28 மாவட்டங்களில்  மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தென்காசி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம்.
 
இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட மேலும் பல மாவட்டங்கள், அத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மொத்தத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்