எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடுத்திய உடையோடு வந்துள்ளோம்: சூடானில் இருந்து திரும்பிய தமிழர்கள் கண்ணீர்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (14:17 IST)
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதை அடுத்து அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு தப்பித்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசின் முயற்சியால் சூடானில் உள்ள இந்தியர்கள் டெல்லிக்கு விமான மூலம் அழைத்துவரப்பட்டனர் என்பதும் இந்த விமானத்தில் வந்த ஒன்பது தமிழர்கள் தற்போது சென்னை மதுரை ஆகிய இடங்களுக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை சேர்ந்த ஐந்து பேர் மற்றும் மதுரை சேர்ந்த நான்கு பேர் சூடான் நாட்டில் இருந்து விமான நிலையத்துக்கு வந்த போது அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். இந்த நிலையில் சூடானிலிருந்து திரும்பிய ஒருவர் பேட்டி அளித்த போது நாங்கள் இருக்கும் பகுதியை கைப்பற்றுவதற்காக இரண்டு பிரிவினர் பயங்கரமாக சண்டை போட்டனர். வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறினாலும் துப்பாக்கி மற்றும் குண்டு வெடிப்பு காரணமாக நிறைய பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் 
 
எங்கள் பகுதியில் குடிநீர் மின்சாரம் அனைத்தும் தடைப்பட்டது. இதற்கு மேல் அங்கே இருக்க முடியாது என்று தான் இந்திய அதிகாரிகள் மூலம் நாங்கள் நாடு திரும்பியுள்ளோம்.  கடந்த எட்டு நாட்களாக உணவு உடை இன்றி நாடோடிகளாக வாழ்ந்து வாழ்ந்தோம். கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து பணத்தையும் அங்கேயே விட்டுவிட்டு உடுத்திய துணியோடு தாயகம் திரும்பி உள்ளோம் என்றும் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்