தீபாவளி பண்டிகை அன்று பொது விடுமுறை: அமெரிக்கா அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (14:05 IST)
தீபாவளி பண்டிகை தினத்தன்று பொது விடுமுறை என அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாகாணம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை என்பது இந்தியாவில் உள்ள மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்பதும் இந்த பண்டிகையின் போது நாடு முழுவதும் பொது விடுமுறை என்பதும் தெரிந்ததே.

இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் தீபாவளி தினத்தை விசேஷமாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் தீபாவளி அன்று இந்தியர்களுக்கு வாழ்த்து கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாகாணங்களில் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பென்சில்வேனியா என்ற மாகாணத்திலும் பொது விடுமுறை என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு இது சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்