பஸ்சில் இருந்து தவறி விழுந்த மாணவன் கால்கள் அகற்றம்: கதறி அழுத பெற்றோர்..!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (10:59 IST)
சென்னையில் பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் தவறி விழுந்ததில் இரண்டு கால்களும் உடைந்துவிட்டதை அடுத்து இரண்டு கால்களும் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை கண்டு அந்த மாணவனின் பெற்றோர் கதறி அழுத காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ், மாலையில் பள்ளி முடிந்ததும்அரசு பேருந்தில் பயணம் செய்தார். பஸ்ஸின் முன் பகுதியில் அவர் தொங்கிக் கொண்டு சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக தவறு கீழே விழுந்தார். அவருடைய கால்களின் மேல் இரண்டு பின் சக்கரங்கள் ஏறியதை அடுத்து கால்கள் நசுங்கின

இதையடுத்து அவருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இரண்டு கால்களும் அகற்றப்பட்டன.  இந்த நிலையில் தங்கள் மகனின் கால்கள் அகற்றப்பட்டதை அறிந்த மாணவனின் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பேருந்துகளில் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம் என்று மாணவர்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் அறிவுரை கூறியும் கேளாததால் தற்போது ஒரு மாணவனின் வாழ்க்கையே கேள்விக்குறி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்