பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (16:05 IST)
விருதுநகர் மாவட்ட சிவகாசி அருகே பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப் பள்ளி  ஆசிரியரை அப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்களை  பிடிக்க மாவட்ட டிஎஸ்பி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல் வெளியாகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பொருளாதத்துறை  ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்   கடற்கரை(42) .

இப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் இருவரை, ஆசிரியர் கடற்கரை படிக்கச் சொல்லியதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த மாணவர்கள் இருவர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர்.

இதுதொடர்பாக  சக மாணவர்கள், தப்பியோடிய மாணவர்களின் பெற்றோரிடம் போலீஸார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்