தனிமையில் சிக்கும் காதலர்கள்; டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை! – சென்னையில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:30 IST)
சென்னையில் தனிமையில் சிக்கும் காதலர்களை போலீஸ் வேடமிட்ட ஆசாமி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கைப்பையில் இருந்த பணத்தை ஆசாமி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் விசாரணையில் அந்த பெண் தவறான தகவல்களை தந்ததால் தொடர்ந்து விசாரித்ததில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.’

திருமணமான அந்த பெண்ணுக்கு வேறு ஆணுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. தனிமையில் சந்திக்க விரும்பிய இருவரும் மாதவரத்தில் உள்ள ஒரு பூங்காவில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அப்போது அங்கு காவலர் வேடமிட்டு வந்த ஆசாமி அவர்களை செல்போனில் படம்பிடித்து வைத்துக் கொண்டு அதை பெண்ணின் கணவருக்கு அனுப்புவதாக மிரட்டியுள்ளார்.

பிறகு உடனிருந்த காதலனை விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். பெண் அளித்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீஸார் தண்டையார்பேட்டையை சேர்ந்த டிக்கி மணி என்பவனை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் கடந்த 5 வருடங்களாக போலீஸ் கெட் அப்பில் சென்று தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி சுமார் 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக டிக்கி மணி ஒப்புக்கொண்டுள்ளான். பலர் குடும்ப மானம் உள்ளிட்டவற்றிற்கு பயந்து இதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்