அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்த நிலையில் தேமுதிக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.