வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என கணித்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் புதுவையில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது
இதன் காரணமாக சென்னை மற்றும் புதுவை உள்பட பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது