260 கி.மீ. தூரத்தில் நீடிக்கிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன், 18 நவம்பர் 2021 (14:04 IST)
சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்பதை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னையில் இருந்து 260 கிலோ மீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது என்றும் இதன் காரணமாக வட தமிழகத்தை ஒட்டிய கடல் பரப்பில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்