புயல் அப்டேட்: கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (14:02 IST)
வங்கக் கடலில்  நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மண்டல மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
 
இந்த நிலையில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 780 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
 
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என தெரிவித்துள்ளது.
 
மேலும், பின் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 4 ஆம் தேதி புயலாக கரையை கடக்க கூடும் எனவும், இதனால் டிசம்பர்  3 ஆம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்