எஸ்.வி.சேகர் வீடு மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (17:10 IST)
நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து கொச்சையான ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். இந்த கருத்துக்கு பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினர்களும் எஸ்.வி.சேகருக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்
 
இதனையடுத்து எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, நண்பர் கொடுத்த அந்த பதிவை தான் படிக்காமல் பதிவு செய்து விட்டதாகவும், பின்னர் தவறை உணர்ந்து அந்த பதிவை நீக்கிவிட்டதாகவும் கூறி சமாளித்தார்.
 
இந்த நிலையில் எஸ்.வி.சேகர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பெருமளவு திரண்ட பத்திரிகையாளர்கள் பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
 
இந்த நிலையில் சென்னை மந்தவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீடு மீது சற்றுமுன்னர் மர்ம நபர்கள் கல்வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்வீச்சு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்