மெரினா கடற்கரையில் குளித்தால்.. ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு

வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (16:40 IST)
கோடையில் கடற்கரைக்கு செல்பவர்கள் கடல் நீரில் குளிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை மெரீனாவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை குளிப்பதை பார்க்க முடியும்
 
இந்த நிலையில் மெரீனாவில் குளித்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய கடல் ஆராய்ச்சி மையம் சமீபத்தில் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், எண்ணூர், கோவளம் ஆகிய ஐந்து கடற்கரைகளில் இருந்து 192 மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது.
 
இந்த ஆய்வின் முடிவின்படி மெரினாவில் உள்ள கடல்நீரில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாகவும், இங்கு குளித்தால் அந்த பாக்டீரியாக்கள் உடலில் சென்று வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்னை, வாந்தி, வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
மெரீனாவில் அதிகளவு பாக்டீரியாக்கள் இருப்பதற்கு சுத்திகரிக்கப்படாத சாக்கடை நீர் பல ஆண்டுகளாக கடலில் கலப்பதே காரணம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
 
சென்னையில் ஓரளவுக்கு பாதுகாப்பான கடல் என்றால் அது கோவளம் பீச்தான் என்றும், அங்குதான் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்த அளவு இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்