மத்திய அரசுக்கு உதவி செய்தார்களா எஸ்.வி.சேகர், எச்.ராஜா?

வெள்ளி, 20 ஏப்ரல் 2018 (16:26 IST)
கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் எச்.ராஜா, இன்னொருவர் எஸ்.வி.சேகர்.
 
எச்.ராஜா அவர்கள் கருணாநிதி, கனிமொழி குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்களும், எஸ்.வி.சேகர் அவர்கள் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பேர்களுக்கும் ஆளுங்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இருவருக்கும் எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் இந்த பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் விமர்சர்கள் எஸ்.வி.சேகர் மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் மத்திய அரசுக்கு மிகபெரிய உதவியை செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். ஆம், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காவிரி பிரச்சனையால் மத்திய அரசுக்கு தீராத தலைவலியாக இருந்தது. காவிரி மேலாண்மை வாரியம் குறித்து கர்நாடக தேர்தல் முடியும் வரை முடிவெடுக்க முடியாத நிலையில் இந்த போராட்டங்களால் மத்திய அரசு தர்மசங்கடத்தில் இருந்தது.
 
ஆனால் எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகியோர்களின் சர்ச்சைகள் காரணமாக தற்போது காவிரி, ஸ்டெர்லைட் உள்பட எந்த போராட்டங்களும் தமிழகத்தில் இல்லை. ஊடகங்களும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலாதேவி , கவ்ர்னர் கன்னத்தை தட்டியது ஆகிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இப்போது சொல்லுங்கள் மத்திய அரசுக்கு எஸ்.வி.சேகர், எச்.ராஜா ஆகிய இருவர்ம் உதவி செய்தார்களா? இல்லையா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்