தேடித்தேடி பத்திரிக்கை வெச்சும் யாரும் வரலயா?! திடீர்னு வந்து சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர்! - மகிழ்ச்சியில் கிங்காங்!

Prasanth K

வெள்ளி, 11 ஜூலை 2025 (10:29 IST)

பிரபல தமிழ் குணச்சித்திர நடிகரான கிங்காங் மகளின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

தற்போது தமிழ் சினிமா உலகில் அதிகம் பேசப்படும் நிகழ்ச்சி என்றால் அது நடிகர் கிங்காங்கின் மகள் திருமணம்தான். ரஜினிகாந்த் நடித்து வெளியான அதிசய பிறவி படம் மூலம் அறிமுகமான நடிகர் கிங்காங், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இவருடைய மகளின் திருமணத்திற்கு சமீபத்தில் ஏற்பாடான நிலையில் ரஜினிகாந்த் தொடங்கி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கும், நண்பர்களுக்கும், சினிமா டெக்னீஷியன்களுக்கும் அழைப்பிதழ்களை வழங்கி வந்தார் கிங்காங். இந்த புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. 

 

நேற்று கிங்காங்கின் மகள் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் சூழ நடந்து முடிந்த நிலையில் அதை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்துள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திச் சென்றார். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் என பல அரசியல் பிரபலங்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

 

ஆனால் கிங்காங் இத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்த திரைத்துறையில் இருந்து முக்கியமான நபர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது. கிங்காங்கி நீண்ட கால சினிமா நண்பர்கள் சிலரும், வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் சில முன்னணி நடிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்