பாமக கட்சி தொடங்கி 37 ஆண்டுகள் ஆவது குறித்து கட்சி தொண்டர்களுக்கு அன்புமணி எழுதியுள்ள கடிதம் ராமதாஸ் ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக கட்சியில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான முரண்பாடு தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பாமக செயற்குழு கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை பனையூரில் நடந்த அன்புமணி தலைமையிலான கூட்டத்தில் மறுத்து அவர்கள் தனியாக ஒரு தீர்மானத்தை செய்தார்கள்.
இந்நிலையில் தற்போது அன்புமணி பாமகவின் 37வது ஆண்டு நிறைவு குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது. அதனால் தான், 1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice), 2. m (Women's Right to Live Free from Violence) 3. வேலைக்கான உரிமை (Right to Employment) 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food) 5. s (Right to Development) 6. சேவைகளுக்கான உரிமை (Right to Public Services), 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education) 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm) 9. Bu (Right to Sustainable Urban Development) 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment) ஆகிய 10 உரிமைகளை தமிழக மக்களுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ள கட்சி நிறுவனரான ராமதாஸ் இதுவரை திமுக எதிர்ப்பு நிலைபாடு எதையும் பதிவு செய்யவில்லை. கடந்த தேர்தலிலேயே அன்புமணி அழுது கேட்டுக் கொண்டதால்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க சம்மதித்தேன் என ராமதாஸ் பேசியிருந்தார். இப்போதும் அன்புமணிதான் டெல்லி விசிட், அமித்ஷாவுடன் சந்திப்பு என பாஜக கூட்டணிக்கு அடித்தளம் போட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதில் ராமதாஸுக்கு விருப்பம் இல்லையென்றும், அதனால்தான் கூட்டணி முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை தன் கையில் அவர் வைத்துள்ளதாகவும், மேலும் திமுக கூட்டணியில் இணைவது குறித்த யோசனையும் அவருக்கு இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் கேட்காமலேயே அன்புமணி, திமுகவுக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டு, சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பது பாமகவில் உள்ள ராமதாஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அன்புமணியின் இந்த அறிவிப்பு ராமதாஸ் பதில் தருவார் எனவும் பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K