இடைத்தேர்தல் மே 18ஆ? மே 19ஆ? மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தால் குழப்பம்!

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (08:29 IST)
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மே 18ஆம் தேதி எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
 
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடும் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது, 'கடந்த 18ம் தேதி மோடியை வீட்டுக்கு அனுப்ப எப்படி முடிவு எடுத்தீர்களோ அதேபோல் இந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவெடுக்க வேண்டும் என்று பேசினார். மே 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மே 18ஆம் தேதி முடிவெடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால் வாக்காளர்கள் தேர்தலுக்கு ஒருநாள் முன்பே யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்துவிடுவார்கள் என்றும், அவ்வாறு முந்தைய நாள் எடுக்கும் முடிவு எடப்பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப எடுத்த முடிவாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கவே மு.க.ஸ்டாலின் அவ்வாறு கூறியதாகவும் திமுகவினர் விளக்கம் அளித்தனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்