தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி இன்று சென்னை உயர்நீதிமன்றமும் கருத்துக் கூறியது
இது குறித்த வழக்கு இன்று நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் காரசாரமான கேள்விகளைக் கேட்டது என்பதும் அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
இதே போன்று தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது :
3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMOகாட்டும் வழியையாவது @CMOTamilNaduபின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.