ஈபிஎஸ் முதல்வர் பதவி பறிபோக டீ குடித்த ஸ்டாலின்

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (10:41 IST)
ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியை பறிபோக செய்ய அவருடன் அமர்ந்து டீ குடித்தால் போதுமானது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை சீரமைக்க தனது குழுவினர்கள் கொடுத்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை அளித்தார். பின்னர் அவருடன் அமர்ந்து ஸ்டாலின் டீ குடித்தார்.

முதல்வர் ஈபிஎஸ் உடன் அமர்ந்து டீ குடித்தது ஏன் என்பது குறித்து நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஸ்டாலின் விளக்கினார். ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அவருடன் அமர்ந்து டீ குடித்ததாகவும், அதனையடுத்து அவரது முதல்வர் பதவி பறிபோனதாகவும், அதேபோல் ஈபிஎஸ் முதல்வர் பதவியும் பறிபோகவே அவருடன் அமர்ந்து டீ குடித்ததாகவும் கூறினார். மு.க.ஸ்டாலின் இதனை நகைச்சுவைக்காக தெரிவித்தாலும், இதனை வைத்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்