மு.க.ஸ்டாலினை எரிச்சல் அடைய செய்த வைகோவின் பேச்சு

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (00:40 IST)
முரசொலி பவள விழா நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பெய்த மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விழா இன்று சென்னையில் நடைபெற்றபோது அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்.



 
 
அவருடைய பேச்சில் அனல் கலந்தாலும் முக. அழகிரியின் பெருமை குறித்தும் வைகோ சில இடங்களில் பேசினார். இது மு.க.ஸ்டாலினை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்படுகிறது. சகோதரராக இருந்தாலும் மு.க.அழகிரியை தனது அரசியல் போட்டியாளராக கருதி வரும் அழகிரியை தன்னுடைய மேடையிலேயே வைகோ பாராட்டி பேசுவதா? என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.
 
இந்த விழாவில் அழகிரியின் பேச்சை வேண்டுமென்றே பேசவில்லை, ஒரு புளோவில் வந்துவிட்டது என வைகோ தரப்பினர் மறுத்துவிடாலும் வைகோ உண்மையில் தெரியாமல் பேசினாரா? அல்லது ஸ்டாலினை கடுப்பேற்ற வேண்டும் எபதற்காக பேசினாரா? என்பது புரியாமல் திமுகவினர் திணறலில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்