உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை!

புதன், 9 மார்ச் 2022 (12:49 IST)
உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

 
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். 
 
இந்நிலையில் உக்ரைனிலிருந்து திரும்பும் இந்திய மருத்துவ மாணவர்கள் மீண்டும் அங்கு சென்று படிப்பதற்கான சாத்தியம் இல்லை. ஆனால், அவர்களை இந்தியாவில், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் சேர்த்துக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ இடங்கள் குறைவாகவே உள்ளன.
 
எனவே உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையத்தை சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு மாணவர்கள் இலவச ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்