உக்ரைன் போரால் துயரில் மக்கள்! – நிதியுதவி செய்த டைட்டானிக் ஹீரோ!

புதன், 9 மார்ச் 2022 (11:24 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதாக் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டு மக்களுக்கு உதவ நிதியுதவி செய்துள்ளார் டி காப்ரியோ!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 14 நாட்களுக்கும் மேலாக போர் தொடர்ந்து உள்ள நிலையில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. பல இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் நாடி செல்கின்றனர். வெளிநாட்டு மக்கள் உக்ரைன் எல்லை வழியாக பிற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.

உக்ரைனில் போர் காரணமாக மக்கள் பலர் உணவு, தண்ணீரின்றி தவிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு உதவும் வகையில் உலக நாடுகள் பல நிதியுதவி செய்து வருகின்றன. பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ உக்ரைனில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ இந்திய மதிப்பில் ரூ.7.7 கோடி வழங்கியுள்ளார். மேலும் பலரும் உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்