அடுத்த இரு தினங்கள் எப்படி இருக்கும்? வானிலை அப்டேட்!

புதன், 9 மார்ச் 2022 (11:41 IST)
இன்று தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தகவல். 

 
வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் திடீரென வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தமிழகத்தில் கரை கடந்தது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.
 
முக்கியமாக டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
அதோடு சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்