ஏற்கனவே பல்வேறு தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரஷ்யாவிற்கான கடன் தகுதி மதிப்பீட்டை சர்வதேச நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது. ஆம், ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு B என்ற நிலையில் இருந்து C என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, ரஷ்யா தான் வாங்கும் கடனை திரும்பக் கட்டும் தகுதியை மேலும் இழந்துவிட்டது. இதன் காரணமாக ரஷ்யாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் கடன் தரத் தயங்கும் நிலை ஏற்படும். மேலும் ரஷ்யாவின் கடன் தகுதி மதிப்பீடு C என்ற நிலையில் இருந்து மேலும் ஒரு படி குறைக்கப்பட்டால் அந்நாடு கடன் பெறும் தகுதியை முற்றிலும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.