பண மோசடி வழக்குள் செந்தில் பாலாஜியை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:59 IST)
கடந்த 2011 முதல் 2015 வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும் தற்போது திமுக எம்.எல்.ஏவாக இருப்பவருமான செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே.
 
இந்த வழக்கு எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு, எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பண மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. 
 
நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி ரூ.2.80 கோடி மோசடி செய்தது தொடர்பான புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்