தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதை அடுத்து, வாக்காளர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் பணி ஆகியவை நடைபெற உள்ளது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இன்றும் நாளையும், அதாவது நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களில், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், இடம் மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை பொதுமக்கள் அந்தந்த வாக்குச்சாவடியில் சென்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.