பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

Siva

செவ்வாய், 29 ஜூலை 2025 (14:28 IST)
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அந்த பயங்கரவாதிகளின் முதல் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தாக்குதலில் அப்பாவி இந்தியர்களும், சுற்றுலா பயணிகளும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே.
 
இந்த நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளில் இருவரான ஹபீப் தாஹிர் மற்றும் ஜிப்ரான் ஆகியோர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த இருவரின் புகைப்படங்கள் முதல் முறையாக சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இந்த இருவரும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஸ்ரீநகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின்போது இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
 
மேலும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் கமாண்டர் ஹாஷிம் மூசா என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாக கருதப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்