முன்பதிவை தாண்டி நீளும் காத்திருப்போர் பட்டியல்! – மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கம்?

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (08:36 IST)
பொங்கலுக்கு இயக்கப்படும் ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை இருக்கும் என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு ரயிலில் பயணிக்க முன்பதிவு முழுவதும் நிறைவடைந்த நிலையில் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதிகமான பயணிகள் உள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்