உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு.. தாமாக முன்வந்து வழக்கா?

Siva

புதன், 10 ஜனவரி 2024 (13:58 IST)
உலக முதலீட்டாளர் மாநாட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்றும்  வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ’

வழக்கறிஞர் முனியசாமி என்பவர் இன்று தாக்கல் செய்த மனுவில் சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த மாவட்டங்களில் எந்த தொழிற்சாலையும் இல்லை என்பதால் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்

ALSO READ: கமல்ஹாசன் - எச் வினோத் படம் டிராப்.. என்ன காரணம்?

 எனவே தென் மாவட்ட மக்கள் ஏமாற்றத்தை தீர்க்க தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நீதிபதிகள் இந்த மனு குறித்து கூறிய போது இது போன்ற விவகாரங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடியாது என்றும் மனுதாரர் கோரிக்கையை பொதுநல வழக்காக தாக்கல் செய்தால் விசாரணை செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்