சொத்து குவிப்பு வழக்கு.! சிக்குகிறார்களா அமைச்சர்கள்?..! பிப். 5 முதல் விசாரணை..!!

Senthil Velan

திங்கள், 8 ஜனவரி 2024 (17:58 IST)
அமைச்சர்கள் மீதான வழக்குகள் பிப்ரவரி ஐந்தாம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
 
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவில் உள்ள சிறப்பு நீதிமன்றங்கள் விடுவித்து தீர்ப்பு அளித்தது.
 
இந்த தீர்ப்புகளை எல்லாம் மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.
ALSO READ: விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் பலி.!!
 
இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளில் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் தினசரி விசாரணை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.
 
அரசியல்வாதிகளின் வழக்குகளால் பிற வழக்குகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பிற்பகல் 3 மணிக்கு மேல் நடைபெறும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் விளக்கத்தை பதில் மனுவாகவோ, எழுத்துப்பூர்வமான வாதமாகவோ ஜனவரி 30க்குள் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்