அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார். முரசொலி நிலம் தொடர்பான வழக்கை பட்டியலினத்தோர் ஆணையம் விசாரிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளித்து விளக்கத்தைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.