பொன்முடி மேல்முறையீட்டு வழக்கு: விசாரணை தேதி அறிவிப்பு..!

Mahendran

செவ்வாய், 9 ஜனவரி 2024 (13:44 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகிய இரண்டு பேருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்ய ஏதுவாக சென்னை ஹைகோர்ட் முப்பது நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 12ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேல்முறையீடு மனு என்பதால் குறுகிய காலத்தில் விசாரணை முடிந்து விடும் என்றும் மிக விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுமா அல்லது அவர் விடுதலை செய்யப்படுவாரா என்பது குறித்த தீர்ப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்