தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா! – ஒமிக்ரான் பாதிப்பா?

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (08:53 IST)
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவிய ஒமிக்ரான் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க அதிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கிய ஒமிக்ரான் பாதிப்பு உலக நாடுகள் பலவற்றில் தென்பட தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஒமிக்ரான் பரவி வரும் நாடுகளுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. மேலும் நாட்டில் ஒமிக்ரான் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனாவின் லேசான அறிகுறிகள் அவருக்கு உறுதியாகியுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்