தமிழகத்தில் தற்போது மழை குறைந்து உள்ளதை அடுத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாளை முதல் கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்திருந்தது
தற்போது மழை குறைந்துள்ளதால் நீர் வரத்தும் குறைந்து உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக மாஸ்க் அணிதல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்