வேலூர் மாவட்டம் அருகே மகனுக்கு திருமணம் செய்து வைக்காமல் கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த தந்தையை அவரது மகன் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகில் நாகல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி(53) என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கோவிந்தசாமியின் மூத்த மகன் அவருக்கு திருமணம் செய்து வைக்குமாறு பல முறை தந்தையிடம் கேட்டுள்ளார்.
ஆனால் கோவிந்தவாமி அதை பொருட்படுத்தாமல் அவர் ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார். இதை அறிந்த அவரது மூத்த மகன் தனக்கு திருமணம் செய்து வைக்காமல் அவர் மட்டும் சந்தோஷமாக இருக்கிறார் என்ற ஆத்திரத்தில் கோவிந்தசாமியை கொலை செய்து விட்டார்.
காவல்துறையினர் கோவிந்தசாமியின் மகனை கைது செய்து விசாரணை நடத்தியத்தில் அவர் கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு, குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.