பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தே கமல்ஹாசனுடன் நெருங்கி பழகிவிட்ட கவிஞர் சினேகன், இன்று கமல் ஆரம்பிக்கவுள்ள கட்சி பணியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள இராமேஸ்வரம் சென்றுள்ளார்.
கமல்ஹாசனின் அரசியல் தொடக்கம் குறித்து சினேகன் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'கமல்ஹாசன் அவர்களை இதுவரை திரைப்படங்களில் காதலராகத்தான் பார்த்துள்ளோம். இன்று முதல் அவரை ஒரு தலைவராக பார்க்கின்றோம்.
கமலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தருவது என்பது புதிய விஷயமல்ல. ஆனால் வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்ததை ஆச்சரியத்துடன் பார்த்தோம். ஒவ்வொரு மக்களின் முகத்திலும் ஒருவிதமான சந்தோஷத்தை பார்த்தோம். தமிழக அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட போகிற சந்தோஷமாகத்தான் அது எங்களுக்கு தெரிந்தது
இதுவரை எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக கமல்ஹாசனின் அரசியல் பயணம் சென்று கொண்டிருக்கின்றது. இன்று முழுவதும் இன்னும் என்னென்ன நடக்கும் என்பதை ஆச்சரியத்துடன் பார்க்க நானும் காத்துக்கொண்டிருக்கின்றேன்' என்று கூறினார்.