தலைப்பு செய்தியாகலாம், ஆனால் தலைவராக முடியாது: கமல் குறித்து தமிழிசை

புதன், 21 பிப்ரவரி 2018 (08:20 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது புதிய அரசியல் பயணத்தை சற்றுமுன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கியுள்ளார். அப்துல்கலாம் பள்ளிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதை தவிர மற்ற நிகழ்ச்சிகள் இன்று திட்டமிட்டபடி நடைபெறும் என கமல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இன்று கமல் கட்சி ஆரம்பிப்பது குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது வேண்டுமானாலால் தலைப்பு செய்தியாகலாம். ஆனால் அவர் ஒருபோதும் தலைவராகவோ அல்லது முதல்வராகவோ முடியாது என்று கூறியுள்ளார்.
 
தமிழிசையின் இந்த கருத்துக்கு கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். கமல்ஹாசன் தலைவர் ஆகின்றாரோ இல்லையோ, கண்டிப்பாக நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்குவார் என்று கூறி வருகின்றனர். கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட பாஜக குறைவான வாக்குகள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்